உன்னை பார்த்த முதல் நாள் நான் உணர்ந்தேன் என் பிறப்பிற்கான அவசியத்தை
எத்தனை முறை உன்னைப் பார்த்த போதும்
என் மனதுக்குள் ஒரு பட்டாம்பூச்சி!
உன்னைப் பார்க்காத போதும் தான்
பார்க்கும் போது மனத்திற்குள்
பார்க்காத போது வெளியில் அலைந்து திரிந்தபடி . . .
உன்னைப் பார்த்து நாட்கள் பல ஆகிவிட்டன
மனது மட்டும் உன் நினைவிலேயே நின்றுகொண்டிருக்கிறது !
இந்த கடிதத்தை படித்து விட்டாவது என் முன்னால் வா !
மற்ற முகங்களை பார்க்க மறுக்கும்
என் கண்களுக்கு சொல்லி விட்டு போ
இப்போது -
உன் கண்கள் பார்ப்பதற்கு வேறொரு கண்கள் உள்ளதென்று
உன் குரலை கேட்பதற்கு மற்றொரு செவிகள் உண்டென்று
உன் மனத்தை கொள்ளை இடுவதற்கு மற்றொரு மனம் உள்ளதென்று
இப்போதாவது என் மனது என்னிடம் திரும்ப வரட்டும்!
இப்போது கடிதத்தை அனுப்புகிறேன்
முகவரி தெரியாத உன் மனதிற்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக