வியாழன், 16 ஏப்ரல், 2009

மறக்க நினைக்கின்றேன்!

என்னை மறந்துவிடு
நீ சொல்லிய வார்த்தை
நெரிஞ்சி முள்ளாய் நெஞ்சில் !

மறக்கத்தான் முயற்சிக்கின்றேன்!
ஆனால்

அடிபட்ட அணில்
ஆத்மார்த்தமான இசை
இரவு நேர வெண்ணிலா
ஈரமான ரோஜா
உண்மை சொல்லும் மழலை
ஊமையான இரவுகள்
எல்லையில்லாக் கடல்
ஏக்கமான நினைவுகள்
ஐந்து விரல் ஸ்பரிசம்
ஒற்றையடிப் பாதை
ஓரக்கண் பார்வை
ஔவையின் சொற்கள்

எது பார்க்கும் போதும்
நீ தானே வந்து செல்கிறாய்
என் நினைவில் !


எதை மறந்து விட்டு
வாழச்சொல்கிறாய் என்னை ?

உயிரை மட்டும் எடுத்து விடு !

வேண்டாம் வேண்டாம் !

இதய மாற்று
அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் !
ஆனால்
மூளை வேலை செய்யாமல் தடுக்க வேண்டியது
உன் பொறுப்பு !

2 கருத்துகள்:

Thamira சொன்னது…

விமர்சிக்கலாம் அல்லவா? அல்லது வெற்றுப் பாராட்டுகள் மட்டும் போதுமா?

உங்களுக்கு வயது 20-23க்குள் இருக்கலாமா? மிகச் சாதாரணவகை காதல் கவிதைகள் தங்களுடையது. குறைந்த பட்சமாக அழகுணர்ச்சியாவது மிகுந்திருக்கவேண்டும் கவிதைகளில். நிறைய வாசியுங்கள். மிஸ்ஸிங்..

தொடர்ந்து முயன்றால் கைவரக்கூடும். வாழ்த்துகள்.!

உனக்கென்னடா தகுதி என்று கேட்காதீர்கள். ஹிஹி..

Thamira சொன்னது…

ஸாரி.. முந்தைய பின்னூட்டம் இப்படி வந்திருக்கவேண்டும்.

*******

விமர்சிக்கலாம் அல்லவா? அல்லது வெற்றுப் பாராட்டுகள் மட்டும் போதுமா?

உங்களுக்கு வயது 20-23க்குள் இருக்கலாமா? மிகச் சாதாரணவகை காதல் கவிதைகள் தங்களுடையது. குறைந்த பட்சமாக அழகுணர்ச்சியாவது மிகுந்திருக்கவேண்டும் கவிதைகளில். மிஸ்ஸிங்..

நிறைய வாசியுங்கள்.

தொடர்ந்து முயன்றால் கைவரக்கூடும். வாழ்த்துகள்.!

உனக்கென்னடா தகுதி என்று கேட்காதீர்கள். ஹிஹி..