வெள்ளி, 22 ஆகஸ்ட், 2008

புன்னகை பூவே !

என் கனவுப்பூவாய் ஆனவளே !
என்னதான் ஆனதோ என் மனதிற்கு

முழுவதாக கொடுத்துவிடத்தான் நினைக்கிறேன் உன்னிடம்,
நீயாவது எடுத்துக் கொண்டிருக்கலாம்!
ஆனால் அதுவும் இல்லை !

எங்கேயும் எப்போதும் தொட்டுவிடும் தூரத்தில் நீ ...
ஆனால்
கை நீட்டுகையில் கரைந்து போகிற நுரையாய் !

கரைந்து போனாலும்
மனதைக் கரைப்பது போல உன் நினைவுகள்
என் நெஞ்சில் ஈரமாய் !

எப்படித்தான் பார்த்துக்கொண்டாலும்
உன் பின்னாலேயே சுற்றும் காற்றாய்
என் மனது !

தொலைத்துவிடத்தான் ஆசைப்படுகிறேன்
இப்படி சொல் பேச்சு கேட்காத என் மனதை !

எனக்காக ஒரு வேண்டுகோள் உன்னிடத்தில்
வந்துவிடுவாயா எனக்காக?

பலருக்கு தேவதையாக இருக்கலாம் நீ !
ஆனால்,
எனக்கு நீ மட்டும்தானே தேவதை !

உன்னிடம் வரம் கேட்டு,
கையேந்தி இல்லையில்லை
இதயமேந்தி நிற்கிறேன் என் கைகளில்!

மற்றவர்கள் கேட்பது போல
நான் உன் இதயத்தை கேட்கவில்லை பதிலுக்கு !
ஆனால் ,
ஒரு புன்னகை மட்டுமாவது கொடு
அதுபோதும் எனக்கு!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ஓ ! என்ன இது ? கத்தியின்றி கவிதை கொண்டு இதயம் திறக்கும் யார் இவன்?

இது மிக அழுத்தமான கவிதை...

இல்லை.. இது..இது.. ஒரு காதல் மரணத்தின் கவிதை வாக்குமூலம் ,காதல் வலி உணர்ந்த‌ மன‌ப்பதிவின் மறுபதிப்பு .

நான் வேறென்ன சொல்ல என் தோழா ?...